சித்திரை மாத பவுர்ணமிபூஜைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வருக! உங்கள் வாழ்க்கையில் மிக முக்கிய திருப்புமுனையைப் பெறுக!!!
சித்திரை மாத பவுர்ணமிபூஜைக்கு வருக!ஸ்ரீவில்லிபுத்தூர்,சிவகாசி ரோட்டில் அமைந்திருப்பது முதலியார்பட்டித்தெரு.இங்கே நடுநாயகமாக வடக்குநோக்கி அமர்ந்துவரங்களை வாரி வழங்குபவள் எனது அன்னை பத்திரகாளி!மாசிமாதம் வந்த சிவராத்திரியன்று கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி இந்தக் கோவிலில்தான் நிகழ்ந்தது.இந்த அபூர்வ அதிசய சம்பவம் சுமார் 40 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில் பிறந்திருப்பவர்கள்,திருமண வாழ்க்கையில் மாபெரும் அவமானத்தை சந்தித்திருப்பவர்கள்,நிம்மதியையும் அமைதியான வாழ்க்கையையும் எதிர்பார்ப்பவர்கள்,தற்போது ராகு மகா திசை நடப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த சித்திரை பவுர்ணமி நாளன்று (27.4.2010 செவ்வாய்க்கிழமை இரவு 9.30க்கு ஆரம்பித்து நள்ளிரவு 1.00 மணி வரை ) பவுர்ணமிபூஜை நடைபெறுகிறது.நீங்கள் தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் மதுரைக்கு வந்து,ராஜபாளையம்/தென்காசி/செங்கோட்டை செல்லும் பேருந்தில் ஏறி ஸ்ரீவில்லிபுத்தூர் என பயணச்சீட்டு கேட்டுவருக! மதுரையிலிருந்து சுமார் 2 மணி நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துவிடலாம்.ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்திலிருந்து சிவகாசி ரோட்டில் நடந்துவந்தால் வெறும் 10 நிமிடத்தில் வந்துவிடலாம்.பல வருடங்களாக திருமணம் ஆக கன்னிப்பெண்கள் இரண்டு அல்லது மூன்று பவுர்ணமிபூஜைகளில் கலந்துகொண்டதும்,மிகச்சிறப்பான வரன் அமைந்திருக்கிறது.மணவிலக்குபெற்ற பல பெண்கள்,தொடர்ந்து பவுர்ணமி பூஜைகளில் கலந்துகொண்டதும், தனது மனதுக்கினிய கணவன்களை அடைந்து நிம்மதியான,மகிழ்ச்சியான மறுமண வாழ்க்கையை அடைந்திருக்கிறார்கள்.பொறுப்பில்லாத வாழ்க்கைத்துணையைப் பெற்றிருப்பவர்கள் இந்த பத்திரகாளியம்மனை தொடர்ந்து வழிபட்டுவருவதால்,சிறு சிக்கலுமின்றி தனது வாழ்க்கைத்துணையைப்பிரிந்து,பொறுத்தமான வேறு வாழ்க்கைத்துணையைப் பெற்றிருக்கிறார்கள்.(சிலரது வாழ்க்கைத்துணைகள் மனம் திருந்தி, மறுமணத்திற்கு அவசியமின்றியும் சேர்ந்து வாழ்ந்துவருகின்றனர்)நீங்கள் ஒரே ஒருமுறை இந்த சித்திரை பவுர்ணமிபூஜையில் கலந்துகொண்டு செக் செய்துகொள்ளலாம்.
Posted by spiritual o
11:44 PM
8:03 AM
அன்புள்ள சாலிய பெருமக்களுக்கு
நமது ராஜபாளையம் சாலியர்களின் சித்திரை மாதம் ஒன்பதாம் திருவிழா வரும் (26.4.2010)அன்று நடைபெற இருப்பதால் அனைவரும் வந்து அம்மன் அருள் பெறுமாறு வேண்டுகிறோம். மேலும் ஒரு மகிழ்சியான செய்தி நமது தெருவில் நடந்த தை திருநாள் விழா நிகழ்சியை விரைவில் வெளிவிட உள்ளோம்.
Labels: சித்திரை திருவிழா
7:45 AM
அன்புல்ல சாலிய பெருமக்களுக்கு ,
வரும் மே மாதம் (15.5.2010) அன்று நமது சாலியர்களின் மாநில மாநாடு நடைபெற இருப்பதல் சாலியர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..
இவண்
சாலியர் இளைஞர் அணி,ரஜை
8:40 AM
Subscribe to:
Posts (Atom)