12:54 AM

காளிமுத்துசுவாமிகள்,அன்னதானமடம்,சதுரகிரி

சாலியர் இனத்தில் இராஜபாளையம் நகரில் சிவகாமிபுரம் தெருவில் 1950களில் பிரபலமான குடும்பத்தில் பிறந்தவர் காளிமுத்து என்பவர்.இவர் தனது இளம் வயதிலிருந்தே வத்திறாயிருப்பு அருகிலிருக்கும் சதுரகிரிக்கு அடிக்கடி சென்றுவந்தார்.அதன் விளைவாக,சதுரகிரி சுந்தரமகாலிங்கசுவாமி கோவிலின் அருகிலேயே தினசரி அன்னதானம் செய்யத்துவங்கினார்.

அதற்காக அன்னதான மடம் ஒன்றைத் துவங்கினார்.

இந்த மடம் சுமார் 1980களின் ஆரம்பத்திலிருந்து சதுரகிரி மலைமேல் செயல்பட்டுவருகிறது.இவரது இந்த சேவையால் இவருக்கு பெரும்புகழ் ஏற்பட்டது.இந்தப்புகழை ஜீரணிக்க இயலாமல்,சேடப்பட்டியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் இவருக்கு ஏராளமான தொல்லைகள் கொடுத்துவந்தார்.அவர் வேறு யாருமில்லை;அடல்பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது,நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வாக்குச்சீட்டை தனது சட்டைப்பையில் வைத்திருந்தவர்.

தனது அரசியல் செல்வாக்கை வைத்து,அறநிலையத்துறை,வனத்துறை,காவல்துறையை காளிமுத்துசுவாமிகளின் ஆசிரமத்தினை நடத்திட விடாமல் செய்ய முழு மூச்சாக முயன்றார்.காளிமுத்துசுவாமிகளின் தாயாரின் ஆனந்த வல்லியின் சமாதியை இடித்து தரைமட்டமாக்கிட காவல்துறை முயன்றது.அப்படி இடிக்க முயன்றபோது,இடிக்க வந்தவர்கள் அப்படியே சில விநாடிகள் அசையாமல் நின்றுவிட்டார்கள்.இதனால்,அவர்கள் பயந்துபோய் சதுரகிரி மலையை விட்டுஇறங்கிவிட்டனர்.இவர்கள் இடிப்பதற்கு முன் உணவு உண்ட இடம் காளிமுத்துசுவாமிகளின் ஆசிரமம்தான்.என்ன ஒரு விந்தை!!!


சுமார் 25 ஆண்டுகளாக காளிமுத்துசுவாமிகளின் அன்னதான மடம் சதுரகிரியில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.இதற்குத் தேவையான பொருட்களை ஏழுர் சாலியர்கள் வாழும் ஸ்ரீவில்லிபுத்தூர்,இராஜபாளையம்,சத்திரப்பட்டி,புனல்வேலி,
முகவூர்,சுந்தரபாண்டியம்,ஆண்டிபட்டி,சக்கம்பட்டி பகுதியிலிருந்து அரிசி மற்றும் உணவுப்பொருட்களை வீடு தோறும் பெற்று அவற்றை சேகரித்து,சதுரகிரிக்குக் கொண்டு செல்லுகிறார்கள்.சதுரகிரியில் அன்னதானம் செய்கிறார்கள்.


ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் சாலியர்கள் வாழும் தெருக்கள் மொத்தம் 13 இருக்கின்றன.இந்த 13 தெருக்களிலும் வாழும் சாலியர்களின் வீடுகள் அனைத்திற்கும் சென்று, ‘சுந்தரமகாலிங்கத்துக்கு அரோகரா’ என்று காளிமுத்து சுவாமிகளும் அவருடன் வரும் ஓரிருவரும் கூறுவர்.சாலியர்கள் அனைவரும் அவரவரது சக்திக்கேற்ப தன்னிடமிருக்கும் உணவுப்பொருட்களை தானமாகத் தருவர்.பணமாகவும் தருவதுண்டு.இந்த 13 தெருக்களையும் சுற்றிமுடிக்க 10 நாட்களாவது ஆகும்.

0 comments: