1:41 AM

சாலிய நட்சத்திரம்:போத்தீஸ்


சாலிய நட்சத்திரம்:போத்தீஸ் துணிக்கடையின் வெற்றி வரலாறு

ஸ்ரீவில்லிபுத்தூர்:கோதை பிறந்த ஊர்;கோவிந்தன்(மகாவிஷ்ணு)வாழும் ஊர்;தமிழ்நாடு அரசாங்கத்தின் சின்னமாம் கோபுரம் இருக்கும் ஊரும் இதுதான். கர்மவீரர் காமராஜர் சட்டமன்ற உறுப்பினராக ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்றுஜெயித்துத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆனார்.இந்தியாவிலேயே பனை ஆராய்ச்சி நிலையம் இருக்கும் ஒரே ஊரும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர்தான்.தென் தமிழ்நாட்டில் முதல் தனியார் பல்கலைக்கழகம் கலசலிங்கம் பல்கலைக்கழகம் தோன்றியதும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில்தான்.மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில்(தசாவதாரம்)மூன்றாவது அவதாரமான வராக அவதாரம் உருவானதும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.மகாவிஷ்ணுவை வழிபடுவதில் சிறந்த பக்தர்களாக இருப்பவர்கள் ஆழ்வார்கள்.அந்த ஆழ்வார்களில் பெரியாழ்வார்,ஸ்ரீஆண்டாள் எனப்படும் நாச்சியாரம்மன் என இரண்டு ஆழ்வார்கள் பிறந்த ஒரே புண்ணியஸ்தலமும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர்தான்.திருப்பாவை என்னும் வைஷ்ணவப்பாடல் தொகுப்பு பிறந்ததும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில்தான்.தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் நூலகம் பென்னிங்டன் பொது நூலகம் இருப்பதும் இங்கேதான்.புதுவைத்தலம் என்ற பழைய பெயர் இந்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு உண்டு.இந்தபுதுவைத்தலம் என்ற பெயர் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரின் தெற்கு எல்லையில் அமைந்திருக்கும் அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவிலின் பெயரே ஆகும்.சுமார் 1400களில் கட்டப்பட்ட திருக்கோவிலான இந்த சிவாலயம்தான் விருதுநகர் மாவட்ட்த்திலேயே இருக்கும் ஒரே ஒரு பழமையான சைவ திருக்கோவில் ஆகும்.உலகத்திலேயே சாம்பல் நிற அணில் சரணாலயம் இருப்பதும் ஸ்ரீவில்லிபுத்தூரின் வனப்பகுதியான செண்பகத்தோப்பில்தான்!!!

33 வார்டுகளுடன்,இரண்டு பழமையான கோவில்களுடன் சிவ மற்றும் வைணவ திருத்தலங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் இன்று கல்விநகரமாகவேத் திகழ்கிறது.இந்த ஊரின் அமைதிக்கு இங்கிருக்கும் இறைசக்திகளும்,அமைதியை விரும்பும் சாலிய இனமும் காரணம் என நிரூபிக்கமுடியும்.அப்படிப்பட்ட சாலியர் இனத்தில் பிறந்தவர்தான் சடையாண்டி மூப்பனார் அவர்கள்.

அவர்கள் தனது மகனாகிய போத்தி மூப்பனாரின் பெயரால் கி.பி.1920களில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகில் ஒரு துணிக்கடையைத் துவக்கினார்.அதுவே,இன்று சென்னையில் போத்தீஸ் என்றே ஆலமரமாக விழுதுடன் விளங்குகிறது

கி.பி.1920 முதல் கி.பி.1940கள் வரையிலும் ரொக்கத்துக்கு மட்டுமே துணிமணி(ஜவுளி என்பது ஆங்கில வார்த்தை என்று அறிக) விற்பனை செய்துவந்தார்.அது வரையிலும் தனது குடும்பத்துக்கும் சிக்கனத்தின் அவசியத்தை வலியுறுத்திவந்தார்.கி.பி.1940களின் இறுதியில் ஆண்டாள் கோவில் அருகில் ஒரு இடத்தை வாங்கினார்.அந்த இடத்தில் புதிய போத்தீஸ் என்ற பெயரில் துணிக்கடையைத் துவக்கினார்.1980களின் இறுதியில் அந்தக்கடை விரிவடைந்தது.1990களில் திருநெல்வேலியில் போத்தீஸ் துணிக்கடை ஐந்துமாடிகளுடன் துவக்கப்பட்டது.அதன் வியாபார வீச்சு தூத்துக்குடி,திருச்செந்தூர்,நாகர்கோவில்,மார்த்தாண்டம்,கேரளாவின் எல்லைநகரங்கள் வரையிலும் வியாபித்தது.

1990களின் இறுதியில் சென்னையில் போத்தீஸ் கால் பதித்தது.இன்று சென்னை வாழ்நடுத்தர மக்களின் ஆடைகளுக்கான லட்சியக்கடையாக சென்னை போத்தீஸ் உயர்ந்து நிற்கிறது.விரைவில் கோவையிலும் போத்தீஸ் கிளைதிறக்கவுள்ளனர்.சென்னையிலிருந்து ஓட்டோ(otto)என்ற ஆயத்த ஆடை அதாங்க ரெடிமேட் ஆடைகளையும் போத்தீஸ் சந்தைப்படுத்திவருகின்றனர்.

சாலியர்களின் நட்சத்திரங்களில் ஒன்றாக போத்தீஸை சாலியாஸ் வலைப்பூ போற்றுகிறது.

0 comments: