if, you may contact this blogspot writer or owner.....please go to www.aanmigakkadal.blogspot.com and mail this blogspot.http://www.aanmigakkadal.blogspot.com
சாலிய நட்சத்திரம்:போத்தீஸ் துணிக்கடையின் வெற்றி வரலாறு
ஸ்ரீவில்லிபுத்தூர்:கோதை பிறந்த ஊர்;கோவிந்தன்(மகாவிஷ்ணு)வாழும் ஊர்;தமிழ்நாடு அரசாங்கத்தின் சின்னமாம் கோபுரம் இருக்கும் ஊரும் இதுதான். கர்மவீரர் காமராஜர் சட்டமன்ற உறுப்பினராக ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்றுஜெயித்துத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆனார்.இந்தியாவிலேயே பனை ஆராய்ச்சி நிலையம் இருக்கும் ஒரே ஊரும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர்தான்.தென் தமிழ்நாட்டில் முதல் தனியார் பல்கலைக்கழகம் கலசலிங்கம் பல்கலைக்கழகம் தோன்றியதும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில்தான்.மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில்(தசாவதாரம்)மூன்றாவது அவதாரமான வராக அவதாரம் உருவானதும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.மகாவிஷ்ணுவை வழிபடுவதில் சிறந்த பக்தர்களாக இருப்பவர்கள் ஆழ்வார்கள்.அந்த ஆழ்வார்களில் பெரியாழ்வார்,ஸ்ரீஆண்டாள் எனப்படும் நாச்சியாரம்மன் என இரண்டு ஆழ்வார்கள் பிறந்த ஒரே புண்ணியஸ்தலமும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர்தான்.திருப்பாவை என்னும் வைஷ்ணவப்பாடல் தொகுப்பு பிறந்ததும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில்தான்.தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் நூலகம் பென்னிங்டன் பொது நூலகம் இருப்பதும் இங்கேதான்.புதுவைத்தலம் என்ற பழைய பெயர் இந்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு உண்டு.இந்தபுதுவைத்தலம் என்ற பெயர் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரின் தெற்கு எல்லையில் அமைந்திருக்கும் அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவிலின் பெயரே ஆகும்.சுமார் 1400களில் கட்டப்பட்ட திருக்கோவிலான இந்த சிவாலயம்தான் விருதுநகர் மாவட்ட்த்திலேயே இருக்கும் ஒரே ஒரு பழமையான சைவ திருக்கோவில் ஆகும்.உலகத்திலேயே சாம்பல் நிற அணில் சரணாலயம் இருப்பதும் ஸ்ரீவில்லிபுத்தூரின் வனப்பகுதியான செண்பகத்தோப்பில்தான்!!!
33 வார்டுகளுடன்,இரண்டு பழமையான கோவில்களுடன் சிவ மற்றும் வைணவ திருத்தலங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் இன்று கல்விநகரமாகவேத் திகழ்கிறது.இந்த ஊரின் அமைதிக்கு இங்கிருக்கும் இறைசக்திகளும்,அமைதியை விரும்பும் சாலிய இனமும் காரணம் என நிரூபிக்கமுடியும்.அப்படிப்பட்ட சாலியர் இனத்தில் பிறந்தவர்தான் சடையாண்டி மூப்பனார் அவர்கள்.
அவர்கள் தனது மகனாகிய போத்தி மூப்பனாரின் பெயரால் கி.பி.1920களில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகில் ஒரு துணிக்கடையைத் துவக்கினார்.அதுவே,இன்று சென்னையில் போத்தீஸ் என்றே ஆலமரமாக விழுதுடன் விளங்குகிறது
கி.பி.1920 முதல் கி.பி.1940கள் வரையிலும் ரொக்கத்துக்கு மட்டுமே துணிமணி(ஜவுளி என்பது ஆங்கில வார்த்தை என்று அறிக) விற்பனை செய்துவந்தார்.அது வரையிலும் தனது குடும்பத்துக்கும் சிக்கனத்தின் அவசியத்தை வலியுறுத்திவந்தார்.கி.பி.1940களின் இறுதியில் ஆண்டாள் கோவில் அருகில் ஒரு இடத்தை வாங்கினார்.அந்த இடத்தில் புதிய போத்தீஸ் என்ற பெயரில் துணிக்கடையைத் துவக்கினார்.1980களின் இறுதியில் அந்தக்கடை விரிவடைந்தது.1990களில் திருநெல்வேலியில் போத்தீஸ் துணிக்கடை ஐந்துமாடிகளுடன் துவக்கப்பட்டது.அதன் வியாபார வீச்சு தூத்துக்குடி,திருச்செந்தூர்,நாகர்கோவில்,மார்த்தாண்டம்,கேரளாவின் எல்லைநகரங்கள் வரையிலும் வியாபித்தது.
1990களின் இறுதியில் சென்னையில் போத்தீஸ் கால் பதித்தது.இன்று சென்னை வாழ்நடுத்தர மக்களின் ஆடைகளுக்கான லட்சியக்கடையாக சென்னை போத்தீஸ் உயர்ந்து நிற்கிறது.விரைவில் கோவையிலும் போத்தீஸ் கிளைதிறக்கவுள்ளனர்.சென்னையிலிருந்து ஓட்டோ(otto)என்ற ஆயத்த ஆடை அதாங்க ரெடிமேட் ஆடைகளையும் போத்தீஸ் சந்தைப்படுத்திவருகின்றனர்.
சாலியர்களின் நட்சத்திரங்களில் ஒன்றாக போத்தீஸை சாலியாஸ் வலைப்பூ போற்றுகிறது.
சாலியர் இனத்தில் இராஜபாளையம் நகரில் சிவகாமிபுரம் தெருவில் 1950களில் பிரபலமான குடும்பத்தில் பிறந்தவர் காளிமுத்து என்பவர்.இவர் தனது இளம் வயதிலிருந்தே வத்திறாயிருப்பு அருகிலிருக்கும் சதுரகிரிக்கு அடிக்கடி சென்றுவந்தார்.அதன் விளைவாக,சதுரகிரி சுந்தரமகாலிங்கசுவாமி கோவிலின் அருகிலேயே தினசரி அன்னதானம் செய்யத்துவங்கினார்.
அதற்காக அன்னதான மடம் ஒன்றைத் துவங்கினார்.
இந்த மடம் சுமார் 1980களின் ஆரம்பத்திலிருந்து சதுரகிரி மலைமேல் செயல்பட்டுவருகிறது.இவரது இந்த சேவையால் இவருக்கு பெரும்புகழ் ஏற்பட்டது.இந்தப்புகழை ஜீரணிக்க இயலாமல்,சேடப்பட்டியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் இவருக்கு ஏராளமான தொல்லைகள் கொடுத்துவந்தார்.அவர் வேறு யாருமில்லை;அடல்பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது,நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வாக்குச்சீட்டை தனது சட்டைப்பையில் வைத்திருந்தவர்.
தனது அரசியல் செல்வாக்கை வைத்து,அறநிலையத்துறை,வனத்துறை,காவல்துறையை காளிமுத்துசுவாமிகளின் ஆசிரமத்தினை நடத்திட விடாமல் செய்ய முழு மூச்சாக முயன்றார்.காளிமுத்துசுவாமிகளின் தாயாரின் ஆனந்த வல்லியின் சமாதியை இடித்து தரைமட்டமாக்கிட காவல்துறை முயன்றது.அப்படி இடிக்க முயன்றபோது,இடிக்க வந்தவர்கள் அப்படியே சில விநாடிகள் அசையாமல் நின்றுவிட்டார்கள்.இதனால்,அவர்கள் பயந்துபோய் சதுரகிரி மலையை விட்டுஇறங்கிவிட்டனர்.இவர்கள் இடிப்பதற்கு முன் உணவு உண்ட இடம் காளிமுத்துசுவாமிகளின் ஆசிரமம்தான்.என்ன ஒரு விந்தை!!!
சுமார் 25 ஆண்டுகளாக காளிமுத்துசுவாமிகளின் அன்னதான மடம் சதுரகிரியில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.இதற்குத் தேவையான பொருட்களை ஏழுர் சாலியர்கள் வாழும் ஸ்ரீவில்லிபுத்தூர்,இராஜபாளையம்,சத்திரப்பட்டி,புனல்வேலி,
முகவூர்,சுந்தரபாண்டியம்,ஆண்டிபட்டி,சக்கம்பட்டி பகுதியிலிருந்து அரிசி மற்றும் உணவுப்பொருட்களை வீடு தோறும் பெற்று அவற்றை சேகரித்து,சதுரகிரிக்குக் கொண்டு செல்லுகிறார்கள்.சதுரகிரியில் அன்னதானம் செய்கிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் சாலியர்கள் வாழும் தெருக்கள் மொத்தம் 13 இருக்கின்றன.இந்த 13 தெருக்களிலும் வாழும் சாலியர்களின் வீடுகள் அனைத்திற்கும் சென்று, ‘சுந்தரமகாலிங்கத்துக்கு அரோகரா’ என்று காளிமுத்து சுவாமிகளும் அவருடன் வரும் ஓரிருவரும் கூறுவர்.சாலியர்கள் அனைவரும் அவரவரது சக்திக்கேற்ப தன்னிடமிருக்கும் உணவுப்பொருட்களை தானமாகத் தருவர்.பணமாகவும் தருவதுண்டு.இந்த 13 தெருக்களையும் சுற்றிமுடிக்க 10 நாட்களாவது ஆகும்.
Labels: அன்னதானமடம், காளிமுத்துசுவாமிகள், சதுரகிரி
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்புவரை மன்னர்களின் அரண்மனையில் சாலியர்கள் முக்கியப்பொறுப்புக்களில் இருந்தனர்.அரபுநாட்டிலிருந்து வாங்கப்படும் புதிய குதிரைகளை போருக்கும்,அணிவகுப்பிற்கும் தயார்படுத்தும் பணியில் இருந்தனர்.அந்த ஜீன் இன்னும் சாலிய ரத்தங்களில் ஓடுவதால்தான், சாலியர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியர்களாகவும்,பிரபலமான ஜோதிடர்களாகவும் இருக்கின்றனர்.
சாலியர்களின் குணங்கள் எல்லோருக்கும் உதவுதல்,எல்லோரிடமும் உண்மையை மட்டுமே பேசுதல்,தமது குடியிருப்புக்களில் அடைக்கலம் தேடி வருபவர்களின் குடும்பத்தாரை தமது சொந்த மகன் மகள் போல பாவித்தல்,எங்கும் எப்போதும் நேர்மையாக இருத்தல்,ஊர் நிர்வாகத்தில் தனது சொந்தங்கள் பிரச்னையைக் கொண்டு வந்தாலும் நியாயமாக தீர்ப்பு வழங்குதல்,பசியென்று வந்தவர்களுக்கு உணவும்,இருப்பிடமும் அளித்தல் .
தனது ஜாதி மீது மட்டும் பாசம் இல்லாத சில ஜாதிகளில் சாலியர் ஜாதியும் ஒன்று என்பது நிர்வாணமான உண்மை.
பிழைப்புக்கு வந்த ஜாதிகளை தாங்கிப்பிடித்து,அவர்களை கோடீஸ்வர ஜாதியாக்கிய சாலிய ஜாதியானது இன்று தனித்தனி மரங்களாகத்தான்(தனிமரம் போல் தனி மனித சாதனையாக மட்டும்) வளருகின்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,எஸ்.இராமச்சந்திராபுரம்,சுந்தரபாண்டியம்,டபிள்யூ.புதுப்பட்டி,முகவூர்,புனல்வேலி, ஆண்டிபட்டி,சக்கம்பட்டி,சுப்புலாபுரம்,இராஜபாளையம் இவைதான் சாலியர்கள் அதிகம் வாழுமிடங்கள்.
எல்லா ஊர்களிலும் சுமார் 15 முதல் 20 வருடங்கள் வரையிலும் கஷ்டப்பட்டு சம்பாதித்து,சேமித்து சேர்க்கும் பணத்தை சாலிய அப்பாக்கள்,தாத்தாக்கள் வட்டிக்கு விட்டு பிழைக்கின்றனர்.யாருக்கு?
சாலியரைத் தவிர பிற ஜாதிக்காரர்களுக்கு.
இது வட்டிக்குவிடுபவர்களுக்கு நல்லதுதானே என்கிறீர்களா? இல்லை.வட்டிக்கு வாங்குபவர்களுக்குத்தான் நல்லது.எப்படி?
கூழைக் கும்பிடு யார் போட்டாலும்,அவர்களுக்கு ஒரு வட்டிக்கு கடன் தருகின்றனர் நமது சாலிய அப்பாக்களும்,தாத்தாக்களும்.(எல்லா ஜாதியிலும் 4 வட்டிக்குக் குறைந்த கடன் தருவதில்லை)
எதுக்கெடுத்தாலும் தற்பெருமையடிக்கும் நமது குணமே அந்த கடனை வரவிடாமல் தடுத்துவிடுகிறது.
எனக்குத் தெரிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சாலியர் ஒருவர், வேறு ஜாதியைச் சேர்ந்தவருக்கு வெறும் ரூ.15,000/- கடன் கொடுத்தார்.இரண்டு வருடம் வரை ஒழுங்காக வட்டி வந்தது.வட்டிக்கு வாங்கியவரின் வீட்டின் மதிப்பு ரூ.1,00,000 பெறும்.
நமது சாலியச்சிங்கம்,அவன் வீடு எனக்குத்தான் என பெருமையடித்துக்கொண்டே இருக்க,நமது சாலிய நரிகள் சும்மா இருப்பார்களா?
எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு,நேராக அந்த வேறு ஜாதியைச் சேர்ந்தவரிடம் போய் ,
'ஏம்பா தம்பி,நீ எப்படி ஒழுங்கா வட்டி கட்டுறே! உனக்குக் கடன் கொடுத்தவரோ,உன் வீடு அவருக்குனு சொல்லிகிட்டுத்திரியாரப்பா' என உண்மையை உரைத்து உரத்துக்கூறிவிட்டு வந்துவிட்டனர்.
பிறகென்ன வட்டியும் போச்சு,அசலும் போச்சு.இது ஒரு உதாரணம்.
இதன் மூலம் உணரும் மனோதத்துவ உண்மை என்ன?
யாரது மனது பலவீனமானதோ,அவரது மனத்தில் பொறாமை வளரும்.அந்தப் பொறாமையால் இன்று சாலியஜாதி நாசமாகிக் கொண்டிருக்கிறது.
Labels: saliya maharishi, saliya matrimonial, saliyar, saliyas
சால் என்றால் துணி என்று தூய தமிழில் அர்த்தம்.இயர் என்றால் துணியை இயற்றுபவர்கள்(உருவாக்குபவர்கள்) என்று அர்த்தம்.இப்படித்தான் நமக்கு சாலியர் என்று ஜாதிப்பெயர் வந்தது.
நான் கேள்விப்பட்டவரையிலும்,பஞ்சாப்பில் இருக்கும் ஜாலியன்வாலாபாக் என்ற இடம்தான் நமது பூர்வீகமாக இருந்தது கிபி 1000 வரையிலும்!
அப்போது முஸ்லீம்கள் இந்தியாவின் செல்வச்செழிப்பை அறிந்து கொள்ளையடிக்க இங்கே வந்தனர்.அவர்கள் அப்போது இந்தியாவில் இருந்த எல்லா ஜாதியிலும் பெண்ணை திருமணம் செய்தனர்.வலுக்கட்டாயமாகத்தான்.
அதே போல, நம்மையும் மிரட்டினர்.நாம்தான் கில்லாடியாச்சே!
இத்தனாம் தேதியன்று இந்த இடத்துக்கு வரவும்.பெண்ணோடு எங்கள் குல வழக்கப்படி திருமணமே செய்துவைக்கிறோம் என கூறிவிட்டனர்.
திருமணம் முடிந்தால்,முடிந்தகையோடு,நீங்கள்தான் எங்கள் சம்பந்தி ஆகிட்டீங்களே! இஸ்லாத்துக்கு மதம் மாறுங்கன்னு மிரட்டியே லெப்பை,சாயபு,மரைக்காயர் போன்ற இந்து ஜாதிகளை மதம் மாற்றினர்.இந்த சூட்சுமத்தை உணர்ந்த நம் சாலிய முப்முப்முப்முப்பாட்டன்கள் ஒரு பக்கா திட்டம் போட்டனர்.
திருமணநாளன்று,ஒரு நாயை மணப்பெண் போல அலங்கரித்து,கயிற்றால் கட்டிவைத்து மணமேடையில் ஏற்றி வைத்துவிட்டு,இரு நாட்களுக்கு முன்பே பஞ்சாப்பிலிருந்து தென் திசைநோக்கி ஓடி வந்துவிட்டனர்.நமது ஜாதிப்பெயரால் இப்போது அங்கே ஒரு பெரிய மைதானம் மட்டும் இன்னும் இருக்கிறது.
கூகுளில் சாலியர் என்று தேடினால்,பஞ்சாப்பில் ஆரம்பித்து,தமிழ்நாடு,இலங்கை வரையிலும் சாலியர்கள் சிதறிக்கிடக்கின்றனர்.
கேரளாவில் பத்மசாலியர்கள் ஒருங்கிணைந்து அரசியலில் வெற்றிக்கொடி கட்டிக்கொண்டிருக்கின்றனர்.தென் தமிழ்நாட்டில், வள்ளியூர்,நாகர்கோவிலில் பத்மசாலியர்கள் அதிகமாக வாழ்ந்துவருகின்றனர்.தவிர,சாலியர்கள்,பட்டாரியர்கள்,பட்டு சாலியர்கள்,அடவியர்கள்,சவுராஷ்டிரா சாலியர்கள் என பல்வேறு பெயர்களில் வாழ்ந்துவருகின்றனர்.
இதில் பட்டுசாலியர்கள்,பத்ம சாலியர்கள்,சவுராஷ்டிரா சாலியர்கள் தம்மை பிராமணர்களுக்குச் சமமாக நினைத்து உயர்வாக வாழ்ந்துவருகின்றனர்.
பத்மசாலியர்களுக்கும் சாலியர்களுக்கும் கடந்த சில ஆண்டுகளாக திருமண உறவு துவங்கியுள்ளது.
ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷா,கலசலிங்கம் பல்கலைக்கழகம் நிறுவனர் தி.கலசலிங்கம்,போத்தீஸ் நிறுவனர் போத்தி மூப்பனார் என சாலிய நட்சத்திரங்களால் சாலிய இனம் இருப்பது அரசியல் அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது.
சாலியர் இன சகோதரர்கள்,மச்சான்கள்,பெரியப்பாக்கள்,மாமாக்கள்,யாருன்னே தெரியாத சாலிய சொந்தங்களுக்கு
நான் இன்னிக்குத்தான் இந்த வலைப்பூவுக்கு பொறுப்பேற்றிருக்கிறேன்.இனி.இந்த சாலியாஸ் வலைப்பூ உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் சாலியர்களை ஒருங்கிணைக்கும் பாலமாக இருக்கும்;சாலியர்களிடையே சிந்தனையைத் தூண்டும் விதமாக இருக்கும்; மணப்பெண் அல்லது மணமகன் கிடைக்காத சாலியர்களுக்கு மிகச்சிறந்த வாழ்க்கைத்துணை கிடைக்கும்.
ஆமாம் இது ஒரு சர்வதேச சாலியாஸ் ஸ்டால்!!!
சித்திரை மாத பவுர்ணமிபூஜைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வருக! உங்கள் வாழ்க்கையில் மிக முக்கிய திருப்புமுனையைப் பெறுக!!!
சித்திரை மாத பவுர்ணமிபூஜைக்கு வருக!ஸ்ரீவில்லிபுத்தூர்,சிவகாசி ரோட்டில் அமைந்திருப்பது முதலியார்பட்டித்தெரு.இங்கே நடுநாயகமாக வடக்குநோக்கி அமர்ந்துவரங்களை வாரி வழங்குபவள் எனது அன்னை பத்திரகாளி!மாசிமாதம் வந்த சிவராத்திரியன்று கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி இந்தக் கோவிலில்தான் நிகழ்ந்தது.இந்த அபூர்வ அதிசய சம்பவம் சுமார் 40 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில் பிறந்திருப்பவர்கள்,திருமண வாழ்க்கையில் மாபெரும் அவமானத்தை சந்தித்திருப்பவர்கள்,நிம்மதியையும் அமைதியான வாழ்க்கையையும் எதிர்பார்ப்பவர்கள்,தற்போது ராகு மகா திசை நடப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த சித்திரை பவுர்ணமி நாளன்று (27.4.2010 செவ்வாய்க்கிழமை இரவு 9.30க்கு ஆரம்பித்து நள்ளிரவு 1.00 மணி வரை ) பவுர்ணமிபூஜை நடைபெறுகிறது.நீங்கள் தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் மதுரைக்கு வந்து,ராஜபாளையம்/தென்காசி/செங்கோட்டை செல்லும் பேருந்தில் ஏறி ஸ்ரீவில்லிபுத்தூர் என பயணச்சீட்டு கேட்டுவருக! மதுரையிலிருந்து சுமார் 2 மணி நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துவிடலாம்.ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்திலிருந்து சிவகாசி ரோட்டில் நடந்துவந்தால் வெறும் 10 நிமிடத்தில் வந்துவிடலாம்.பல வருடங்களாக திருமணம் ஆக கன்னிப்பெண்கள் இரண்டு அல்லது மூன்று பவுர்ணமிபூஜைகளில் கலந்துகொண்டதும்,மிகச்சிறப்பான வரன் அமைந்திருக்கிறது.மணவிலக்குபெற்ற பல பெண்கள்,தொடர்ந்து பவுர்ணமி பூஜைகளில் கலந்துகொண்டதும், தனது மனதுக்கினிய கணவன்களை அடைந்து நிம்மதியான,மகிழ்ச்சியான மறுமண வாழ்க்கையை அடைந்திருக்கிறார்கள்.பொறுப்பில்லாத வாழ்க்கைத்துணையைப் பெற்றிருப்பவர்கள் இந்த பத்திரகாளியம்மனை தொடர்ந்து வழிபட்டுவருவதால்,சிறு சிக்கலுமின்றி தனது வாழ்க்கைத்துணையைப்பிரிந்து,பொறுத்தமான வேறு வாழ்க்கைத்துணையைப் பெற்றிருக்கிறார்கள்.(சிலரது வாழ்க்கைத்துணைகள் மனம் திருந்தி, மறுமணத்திற்கு அவசியமின்றியும் சேர்ந்து வாழ்ந்துவருகின்றனர்)நீங்கள் ஒரே ஒருமுறை இந்த சித்திரை பவுர்ணமிபூஜையில் கலந்துகொண்டு செக் செய்துகொள்ளலாம்.
Posted by spiritual o